விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா & ஐஸ்வர்யா அடிக்கும் லூட்டிகள் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா & ஐஸ்வர்யா அடிக்கும் லூட்டிகள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா & ஐஸ்வர்யா அடிக்கும் லூட்டிகள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா & ஐஸ்வர்யா அடிக்கும் லூட்டிகள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஹேமா மற்றும் சாய் காயத்ரி இருவரும் சக நடிகைகளுடன் இணைந்து கலக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரையில் குடும்பப் பாங்கான கதைக்களம் கொண்ட ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களின் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் மற்ற சீரியல்களை போல இல்லாமல் இத்தொடர் சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அன்றாட பிரச்சனைகள், கொண்டாட்டங்கள் என நகர்ந்து வருவதால் இதற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

Exams Daily Mobile App Download

அதே போல இந்த சீரியல் எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் தனித்தனி பேன் பேஸ் உண்டு. பொதுவாக ஒரு சீரியலில் வெவ்வேறு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் கேமராவுக்கு பின்னால் எப்போதும் நண்பர்களாகவே பழகி வருவது உண்டு. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருவதால் அந்த படப்பிடிப்பு தளமும் எப்போதும் கலகலப்பாக காணப்படும்.

பாக்கியாவிடம் உண்மையை சொல்ல போகும் ராதிகா, மாட்டிக் கொள்ளும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இது குறித்த படப்பிடிப்பு வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பில் வைத்து நடிகை ஹேமா, சாய் காயத்ரி, கம்பம் மீனா ஆகியோர் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் மலையாளத்தில் பேசும் நடிகை சாய் காயத்ரி, வெயில் அதிகமாக அடிப்பதால் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூற மற்ற எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பது போல வெளியாகி இருக்கும் வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!