அரசு மருத்துவமனைகளில் QR கோடு முறையில் சுகாதாரப்பணி – மருத்துவத்துறை புதிய திட்டம்!

0
அரசு மருத்துவமனைகளில் QR கோடு முறையில் சுகாதாரப்பணி - மருத்துவத்துறை புதிய திட்டம்!

மருத்துவத்துறையில் சுகாதாரம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சுகாதார செயல்பாடுகளை நவீன மயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரப் பணிகள்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தலைநகரில் அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணிகள் குறித்து முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கியூ ஆர் குறியீடு அடிப்படையிலான துப்புரவு முறையை சுகாதாரத்துறை கட்டாயமாகியுள்ளது.இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகள் குறித்தான தங்களது புகார்களை க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிவிக்க முடியும். இதனால் அடுத்த சில நிமிடங்களில் சுகாதார பணி குறித்தான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

SBI MF நிறுவனத்தில் Customer Service Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

மேலும் மருத்துவ சேவைகளை வலுவாக்கவும் சிறந்த தூய்மையை வழங்கும் வகையிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜெய்ப்பூர், ஜோத்பூர், பீகானார், கோட்டா, அஜ்மீர், பாரம்பர், துங்கர்பூர், பரத்பூர், பில்வாரா, சிகார், பாலி சுரு, ஜலாலவர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இத்திட்டத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் ஐந்தாம் தேதிக்குள் அனைத்து மருத்துவ கல்லூரிகளும் இணைக்கப்பட்டு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவ கல்லூரி வட்டத்தில் ஒரு தொழில்நுட்ப அதிகாரி அல்லது தகவல் தொழில்நுட்ப நிபுணர் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!