இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் – மார்ச் 31 கடைசி நாள்!

0
இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் - மார்ச் 31 கடைசி நாள்!

வீட்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் மானியத்தை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் KYC செய்ய வேண்டியது அவசியமாகும்.

KYC கட்டாயம்:

இந்தியாவில் மக்கள் பலர் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் எரிவாயு சிலிண்டர்களில் தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் அதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்கு பின் மானியம் நிறுத்தப்படும்.

KYC இரண்டு வழிகளில் செய்யப்படலாம் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று KYC செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் KYC பெற விருப்பத்தை தேர்வு செய்து செய்யலாம். ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிமுறைகள் இதோ,

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.mylpg.in/என்பதற்குள் செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் ஹச் பி இந்தியன் மற்றும் பாரத் கேஸ் கம்பெனி எரிவாயு சிலிண்டர்களின் படங்கள் இருக்கும்.
  • உங்களுடைய எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் KYC விருப்பம் காட்டும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் ஆதார் சரிபார்ப்பு கேட்கப்படும் மற்றும் OTP வரும் OTP வந்தபின் புதிய பக்கம் திறக்கும்.
  • இந்த பக்கத்திற்கு பின் நிறுவனம் கேட்கும் விபரங்களை உள்ளிட வேண்டும். பெண் கேஒய்சி புதுப்பிப்பு செயல்முறை முடிந்துவிடும்.

அரசு மருத்துவமனைகளில் QR கோடு முறையில் சுகாதாரப்பணி – மருத்துவத்துறை புதிய திட்டம்!

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!