ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தோசை காப்பாற்றுவாரா லட்சுமி?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டு சில மாதங்களே ஆனாலும் வெற்றிநடை போடும் சீரியல் ஆன “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதன் படி திரா பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்க லட்சுமி அம்மா போராடி கொண்டிருக்கையில் சந்தோஷம் ஆதிராவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
புதுப்புது அர்த்தங்கள்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முன்னணி நடிகைகள் நடிக்கும் சீரியல்கள் பார்க்க ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 90’ஸ் கிட்ஸ் கதாநாயகியான நடிகை தேவயானி சன் டிவியில் மெகா ஹிட் சீரியல் ஒன்றில் நடித்து இருக்கிறார். அதன் பின் சீரியலில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார். இந்த சீரியலில் அவர் அம்மாவாக புது பரிமாணத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியல் தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி இருக்கிறது.
‘குக் வித் கோமாளி’ மணிமேகலையை ஒரு வருடம் கழித்து பழிவாங்கிய ரக்சன் – வைரல் பதிவு!
அதற்கு முழு காரணமாக லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு தான். இந்நிலையில் இந்த சீரியலில் பல பரபரப்பான திருப்பங்கள் நடந்து கொண்டு வருகிறது. தனது மகனின் வாழ்க்கையை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் லட்சுமி அம்மா. ஆதிராவின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டுப்பிடிக்க அவர் ஒருபக்கம் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுப்பற்றி பவித்ராவுக்கு எதுவும் தெரியாது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக புதிய திருப்பம் ஒன்று தற்போது வர இருக்கிறது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
அதில் அதிராவின் மிரட்டலுக்கு பயந்து சந்தோஷ் கோயிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமண எபிசோடு குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டு லட்சுமி அம்மா கோயிலுக்கு ஓடி வருகிறார். இந்த பக்கம் ஆதிராவின் மொத்த குடும்பமும் சந்தோஷை வற்புறுத்தி தாலி கட்ட வைக்கின்றனர். லட்சுமி அம்மா தன்னுடைய மகனின் வாழ்க்கையை காப்பாற்றுவாரா என்பதே சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.