விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கும் நடிகை ஸ்வீட்டி திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஸ்வீட்டி

தமிழ் சின்னத்திரையில் சுமார் 700 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் அஞ்சலி என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்வீட்டி என்கிற கண்மணி. நடிப்பில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத கண்மணி, தனது முதல் ப்ராஜக்ட் ஆன ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்றிருக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் பிரசாத் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி போகப்போக பாசிட்டிவ் கேரக்டராக மாறி நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதாக காட்டப்படவில்லை. இதனுடன் ஜீ தமிழில் ‘அமுதாவும் ….?’ என்ற புத்தம் புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் நடிகை கண்மணி தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

மீண்டும் திறக்கப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் இத்தொடரில் லீட் ரோலில் நடிக்க இருக்கும் கண்மணி, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் போலவே இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்க, நடிகை ஸ்வீட்டி திருமண கோலத்தில் சில போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை வீடியோவாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ‘பாரதி கண்ணம்மா’ ஸ்வீட்டிக்கு திருமணமா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!