EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – UMANG செயலியில் இருந்து பணத்தை பெறும் முறை!

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - UMANG செயலியில் இருந்து பணத்தை பெறும் முறை!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - UMANG செயலியில் இருந்து பணத்தை பெறும் முறை!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – UMANG செயலியில் இருந்து பணத்தை பெறும் முறை!

உமாங் செயலியைப் பயன்படுத்தி வீட்டிலேயே இருந்து உங்கள் EPFO கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் முறைகள் குறித்து விரிவான படிநிலைகளை பற்றி இந்த பதிப்பில் காண்போம்.

UMANG செயலி:

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு ஒன்று நிர்வகிக்கப்படும். வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் மூலம் ஊழியர்களுக்கு அதிக அளவிலான நன்மைகள் அளிக்கப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வு நாட்களில் பயனடைந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகவும் உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு சதவீதம் உங்கள் PF கணக்கிற்கு மாற்றப்பட்டு, உங்கள் சேமிப்பிற்கு செல்கிறது. PF கணக்கு பயனர்களுக்கு ஒரு தனித்துவமான கணக்கு எண் (UAN) ஒதுக்கப்பட்டுள்ளது, அதை EPFO ஆன்லைன் போர்ட்டலில் அறிந்து கொள்ளலாம்.

தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!

EPFO சேவையின் முக்கிய நோக்கம், நிதிப் பாதுகாப்பையும், ஓய்வூதியத்திற்கான சேமிப்பையும் வழங்குவதாக உள்ளது. தற்போது அமைப்பானது பயனர்கள் வீட்டில் இருந் படியே தங்கள் கணக்கை நிர்வகிக்க ஆன்லைன் மூலம் செயல்படும் UMANG செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. EPFO பயனர்கள் தங்கள் மொபைல் போன்களில் UMANG செயலியைப் பயன்படுத்தி தங்கள் PF கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியும். Umang செயலியானது ஆதார், எரிவாயு முன்பதிவுகள் மற்றும் PF பணத்தை பெறுவது போன்ற பல்வேறு அரசு சேவைகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த செயலியாக செயல்படுகிறது.

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!

UMANG செயலியை உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு செய்துள்ள மொபைல் எண் நம்பரை பயன்பாட்டில் உள்ளிடலாம் மற்றும் அதற்கு உங்கள் MPIN ஐ அமைக்கலாம். உங்கள் UMANG செயலியுடன் ஆதார் அட்டையை இணைக்க, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இந்த செயலியின் மூலம் பயனர்கள் ஓய்வூதியம் திரும்பப் பெறுதல், கோவிட்-19 முன்பணம், பணியாளரின் பாஸ்புக்கை அணுகுதல், உங்களின் UAN எண், UAN ஒதுக்கீடு போன்ற பல வசதிகளையும் பெறலாம்.

UMANG செயலியின் மூலம் PF பணத்தை பெறும் முறை:
  • உங்கள் மொபைல் போனில் UMANG செயலியைத் திறந்து உள்நுழைய வேண்டும்.
  • இப்பொழுது, திரையில் ‘அனைத்து சேவைகள்’ என்ற விருப்பத்தின் கீழ் உள்ள EPFO பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் கீழ் உள்ள மெனு பகுதியில் ‘ரைஸ் க்ளைம்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • புதிய பக்கத்தில் உங்கள் EPFO UAN எண்ணை உள்ளிட வேண்டும்.
  • இப்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.
  • இப்போது உங்கள் மொபைல் ஃபோனில் க்ளைம் ஆதார் எண்ணைப் பெறுவீர்கள். உங்கள் PF பணத்தை திரும்ப பெறும் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!