தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!

0
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி - 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி - 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக சைகோவ்-டி என்ற மூன்றாவது கொரோனா தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து 11.6 லட்சம் டோஸ் சைகோவ்-டி தடுப்பூசி விரைவில் தமிழகம் வரவுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரு நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்ததாக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழக அரசின் போதிய விழிப்புணர்வால் மாநிலத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தொற்று பரவலும் எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. மேலும் 100% தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும் வாரா வாரம் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது, இதனால் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து 3வதாக சைகோவ்-டி என்ற கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – முதல்வர் அதிரடி உத்தரவு!

இந்த தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. சைகோவ்-டி தடுப்பூசிகள் சுமார் 11.6 லட்சம் டோஸ் விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் விரைவில் சைகோவ்-டி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்தாத மாநிலங்களில் இந்த சைகோவ்-டிகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!