ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்து செய்ய வேண்டியது என்ன? தவறாமல் படிங்க!

0
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்து செய்ய வேண்டியது என்ன? தவறாமல் படிங்க!
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்து செய்ய வேண்டியது என்ன? தவறாமல் படிங்க!
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்து செய்ய வேண்டியது என்ன? தவறாமல் படிங்க!

இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணங்களுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். தற்போது ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது புதிய ஆதார் கார்டு வாங்க விரும்பும் நபர்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக பெற முடியும்.

புதிய ஆதார் கார்டு

இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணங்களுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடிகிறது. மேலும் இறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆதார் கார்டு மூலமாக தான் பெற முடிகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஆதார் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் மற்றும் தங்களது மொபைல் எண் கொடுக்கப்படுகிறது. இதில் ஆதார் எண் மூலமாக தான் தடுப்பூசி செலுத்தும் நபரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

DRDO மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ ஆன்லைன் மூலமாக எளிதாக புதிய ஆதார் கார்டை பெற முடியும். மேலும் புதிய ஆதார் கார்டு பெற நினைக்கும் நபர்கள் அமர்ந்த இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சுலபமாக விண்ணப்பிக்க முடியும். இதற்கு முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு (UIDAI) செல்ல வேண்டும். அதாவது uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

1. இதில் முகப்பு பக்கத்தில் உள்ள Aadhaar Services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. அடுத்ததாக அதில் My Aadhaar என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.

3. தற்போது அதில் உள்ள டிராப் டவுன் மெனுவில் ‘Retrieve Lost or Forgotten EID/UID’ என்பதில் தங்களது பெயர், ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

4. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு UID/EID எண் தங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

5. இறுதியாக இந்த UID/EID எண் மூலமாக புதிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!