DRDO மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஒ) காலியாக உள்ள 2 ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகள் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதில் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலான ஒன்றாகவே இருந்து வரும். இந்த நிலையிலும் தனியார் துறைகள் மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவி கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தொழில்கள் அனைத்தும் முடங்கியது. இதனால் ஏராளமானோர் தங்க.லின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் அரசு கடந்த வருடம் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க தொடங்கியவுடன் மக்கள வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர்.
சென்னை பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் எப்போது?
தற்போது 2022ம் ஆண்டு தொடங்கியதை அடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
மேன்மைக்கும் விண்ணப்பதாரரின் வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாத ஊதியம் 31,000 வழங்கப்படும். விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2 ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியிடங்கள் உள்ளது. இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி தகுதி உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.