ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தனிநபரின் அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் இந்திய குடிமகனின் அடையாள ஆவணங்களுள் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் இருந்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் பலவற்றில் தனிநபரின் அடையாள சான்றிதழாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் எண்ணை வைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனால் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யுஐடிஏஐ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

TN TRB தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆதார் அட்டை தொலைந்து விட்டது எனில் இதனை உடனடியாக திரும்ப பெற்று கொள்ள முடியும். அத்துடன் ஆதார் அட்டையின் நகலை உடனடியாக யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டையின் டிஜிட்டல் காப்பி ஒன்றை தங்களின் மொபைலில் வைத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் எந்த நேரத்திலும் ஆதார் மூலம் கிடைக்கும் சேவைகளை பெற முடியும்.

தற்போது ஆதார் அட்டையை விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

1. இதற்கு முதலாவதாக யூஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதன் முகப்பு பக்கத்தில் டவுன்லோட் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது தங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, அதில் கேப்சாவையும் உள்ளிட வேண்டும்.

4. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு வெரிஃபை அண்டு டவுன்லோடு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

5. அதன் பிறகு தங்களின் ஆதார் அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும். இந்த ஆவணம் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டது.

6. இதனை திறக்க ஆதார் அட்டையில் உள்ள தங்களின் பெயரின் முதல் 4 எழுத்துக்கள் கேப்பிடல் லெட்டரிலும் அத்துடன் பிறந்த ஆண்டு உள்ளிட்டவை கொடுக்க வேண்டும்.

7. இறுதியாக தங்களின் ஆதார் அட்டை அன்லாக் செய்யப்படும். இதனை டிவைஸ் போல்டர் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!