மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முக்கிய அடையாள அட்டையை ஆதார் அட்டையில் உங்களது மொபைல் எண் இல்லாமல் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை பல சேவைகளுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாக உள்ளது. ஆதார் அட்டையில் உள்ள 12-இலக்க அடையாள எண் உங்களது விவரங்கள் குறித்து அடையாளம் காண முடியும், ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.

கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

ஆனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். முன்னதாக இந்த வசதி கொடுக்கப்படாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய மொபைல் எண் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இப்போது அது தேவை இல்லை. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்.

ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழிமுறைகள்:
  • முதலில் யுஐடிஏஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘மை ஆதார்’ என்பதை டைப் செய்ய வேண்டும்.
  • இப்போது ‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது இங்கே 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும்
  • இங்கே நீங்கள் ஆதார் எண்ணுக்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) உள்ளிடலாம்.
  • இந்த செயல்முறைக்குப் பிறகு, உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கார்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், ‘எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் மாற்று எண் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • பிறகு, ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • இப்போது நீங்கள் உள்ளிட்ட மாற்று எண்ணில் ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.
  • அடுத்து, ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, இறுதியாக ‘சப்மிட்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
  • ரீபிரிண்டிங்கின் சரிபார்ப்புக்கு, இங்கே ’ப்ரிவ்யூ ஆதார் லெட்டர்’ என்ற ஆப்ஷன் கிடைக்கும்.
  • இதற்குப் பிறகு, ‘மேக் பேமண்ட்’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து கட்டணத்தை கொடுக்க வேண்டும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!