கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

0
கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

தற்போது விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து பேபி ரக்ஷா (லட்சுமி) நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்திருப்பது போல எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகை வினுஷா ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்த வீடியோ வரவேற்புகளை பெற்று வருகிறது.

நடிகை ரக்ஷா:

இன்றைய கால கட்டத்தில் ஒரு திரைப்படம் அல்லது டிவி சீரியல்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு அது திரைக்கு வருவதற்கு முன்பாகவே அதில் உள்ள சில காட்சிகள், படப்பிடிப்பு புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகிறது. இதில் குறிப்பாக சீரியல்களை பொருத்தளவு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைக்களத்துடன் வெளியாகி வருவதால் ரசிகர்கள் சினிமாவை விட சீரியல் அப்டேட்களை தெரிந்து கொள்ள முக்கியத்துவம் காட்டுகின்றனர். ஏனென்றால் இன்று முடிவடையும் ஒரு எபிசோடில் நாளை என்ன நடைபெறும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது இந்த சீரியல்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உத்தேச 11 அணியின் முழு பட்டியல் இதோ – ரசிகர்கள் உற்சாகம்!

முன்பெல்லாம் ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் எபிசோடை பார்ப்பதற்காக 24 மணிநேரம் காத்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு சீரியலின் படப்பிடிப்பு எடுக்கப்படும் போதே இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை காண்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சமூக வலைதளங்களில் பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

அடிதடி சண்டையில் இறங்கிய எழில், செழியன் – இரண்டாக உடையும் குடும்பம்? ‘பாக்கியலட்சுமி’ இந்த வாரம்!

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மாவான நடிகை வினுஷா தேவி அவருக்கு மகளாக லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பேபி ரக்ஷாவுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இதில் வினுஷா கேமராவை ஆன் செய்து வைத்திருக்க, ரூமுக்கு வெளியில் இருந்து ஓடி வரும் ரக்ஷா கேமராவுக்கு அருகில் வந்து கைகாட்டி விட்டு குதிக்க தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். இதனை எதிர்பார்க்காத வினுஷா விழுந்து விழுந்து சிரிப்பதை போல வெளியான அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!