PF ரெகார்டில் தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PF ரெகார்டில் தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF ரெகார்டில் தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF ரெகார்டில் தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவராலும் PF கணக்கு தொடரப்பட்டு வருகிறது. அந்த கணக்கில் தவறான பிறந்த தேதி இருந்தால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

PF ரெகார்ட்:

அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவராலும் PF கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு PF கணக்கு தொடர்ந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதில் ஒருபகுதி நிறுவனத்துக்கும், மற்றொரு பகுதி ஊழியருக்கும் சொந்தமானதாகும். இத்தகைய முக்கியமான கணக்கு வைக்கப்பட்ட ரெகார்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!

அதிலும் குறிப்பாக பெரும்பாலானோருக்கு பிறந்த தேதி தவறாகவே உள்ளது. அதனை வீட்டிலிருந்தே உங்களது மொபைல் போன் பயன்படுத்தியே நீங்கள் சரி செய்து கொள்ளலாம். தவறான பிறந்த தேதியை மாற்றும் எளிய வழிமுறைகள் பின்வருமாறு:

  • PF பதிவுகளில் தவறான பிறந்த தேதியை சரிசெய்வதற்கு முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன்பின் உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் password மற்றும் captcha code கொடுக்க வேண்டும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தில் Manage Tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • Modify Basic Details தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு தோன்றும் பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் சரியான பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும்.
  • அதன் கீழே I hereby consent to provide my Aadhaar Number, Biometric and/or One Time Pin (OTP) data for Aadhaar based authentication for the purpose of establishing my identity and seeding it with UAN என்று எழுதி இருக்கும் அதனை tick செய்து விட்டு பின்னர் கீழே உள்ள update பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு நீங்கள் மாற்றியமைத்த தகவல் உங்களது முதலாளிக்கு செல்லும். அவர் அதை பார்த்து விட்டு அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக ACCEPT செய்து விட்டதும் உங்களது திருத்தப்பட்ட பிறந்த தேதி PF ரெகார்டில் மாற்றப்பட்டுவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!