மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!

0
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!

நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அந்த ஆயுள் சான்றிதழை புதுப்பிக்க தபால் நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் சான்றிதழ்:

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அதனை உறுதி செய்வதற்கு ஆயுள் சான்று ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் அளிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றானது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து அந்த ஆண்டின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிடில் ஓய்வூதியம் வழங்க தடை ஏற்படும். இந்நிலையில் வீடுதேடி ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம், மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் கீழ் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மைக்ரோ ஏ.டி.எம் செயலி மூலம் தபால் துறையில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

தமிழக டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண், அலைபேசி எண், ஓய்வூதிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக எண் உள்ளிட்டவைகளை தங்கள் பகுதி தபால்காரர்களிடம் கூறி கைவிரல் பதிவு செய்தால் டிஜிட்டல் முறையில் சான்றிதழ் பெறலாம். இந்த ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தலுக்கு தபால் நிலையத்தில் ரூ.70 கட்டணம் செலுத்த வேண்டும். இதனை ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு நினைவூட்டும் விதமாக சான்றிதழ் சமர்ப்பிக்கும் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் நான்கு முறை SMS அல்லது EMAIL அனுப்புமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக அரசின் 10.5% இடஒதுக்கீடு – உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

மேலும் அவர்கள் வீடு தேடி வசதியை பயன்படுத்திக் கொள்கிறார்களா என்றும் கேட்கும் விதமாக SMS அல்லது EMAIL அனுப்பவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நினைவூட்டல் அக்டோபர் 24, நவம்பர் 1, 15 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் 350 தபால்காரர்கள் இந்த சேவையை வழங்குகின்றனர். இது குறித்து மேலும் விபரங்களுக்கு 04546 -260501 எண்ணை அழைக்கலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!