தமிழக அரசின் ‘தாலிக்கு தங்கம்’ – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

1
தமிழக அரசின் 'தாலிக்கு தங்கம்' - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசின் 'தாலிக்கு தங்கம்' - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசின் ‘தாலிக்கு தங்கம்’ – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக தாலிக்கு தங்கம் என்னும் திட்டம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், தகுதிகள் முதலியன குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம்:

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை மற்றும் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை என பல வழங்கி வரும் நிலையில் பெண்களின் நலனுக்காக தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணத்துக்கு நிதி உதவியுடன் மாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது.

அக்.15க்குள் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் – முக்கிய அறிவுறுத்தல்!

10வது படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது. அதேபோல், 12 வது மற்றும் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பெற்றோர்கள் அவர்களின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க உதவும் நோக்கில் இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

மணமகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் கார்டு, 10 வது, 12 வது, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், சமூக சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் அட்டை நகல், திருமண அழைப்பிதழ் நகல், விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றுடன் திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!