தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை சரிபார்க்காமல் பொருட்கள்!

0
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கைரேகை சரிபார்க்காமல் பொருட்கள்!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கைரேகை சரிபார்க்காமல் பொருட்கள்!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை சரிபார்க்காமல் பொருட்கள்!

கைரேகை பதிவு சரியாக இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது கைரேகை இயந்திரம் சரியாக வேலை செய்யாததால் கைரேகை சரி பார்க்காமலேயே ரேஷன் பொருட்கள் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்கள்:

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அன்றாட தேவை பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு அட்டைதாரருக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் சமமாக இந்த பொருட்களை பெற வேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்கிற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினர்.

மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதாவது கைரேகை செலுத்திவிட்டு ரேஷன் பொருட்களை வாங்குமாறு செய்யப்பட்டது. ஆனால் பலமுறை இந்த கைரேகை இயந்திரம் வேலை செய்யாததால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கமுடியாமல் தவித்து வந்தனர். இதனால் மக்களை திருப்பி அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலுமே இத்தகைய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இது தொடர்புடைய நிறுவனமான (இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்தின்‌) – (Unique Identification Authority of India – UIDAI) உயர்‌ நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது.

Post Office இல் மாதம் ரூ.1000 சேமித்து 5 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

தற்போது இந்த கைரேகை முறை முழுமையாக வேலை செய்யும் வரை கைரேகை இல்லாமலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ரேஷன் கடைகள் அனைத்தும் இன்று விடுமுறையை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் பொருட்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!