தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்கள்? அரசு அறிவிப்பு!

0
தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்கள்? அரசு அறிவிப்பு!
தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்கள்? அரசு அறிவிப்பு!
தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்கள்? அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுனர்கள் நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

போக்குவரத்து கழகம்:

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதாவது மக்கள் அவர்களின் அன்றாட வேலைகளுக்கு பொது போக்குவரத்தினை அதிகமாக நாடுகின்றனர். அரசும் அதற்கேற்றவாறு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் நெருக்கடி காலங்களில் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளை செயல்படுத்தி வருகிறது. தற்போது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக அரசின் ஒரு சில திட்டங்களால் போக்குவரத்து கழகம் அதிக நஷ்டங்களை சந்தித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள பார்சல் சேவைகளை மாத மற்றும் வார வாடகைக்கு விடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரத்தில் பிங்க் பேருந்து வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 10,725 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய அரசு ‘ஷாக்’ ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஓட்டுனர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்த விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது, அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமை வைத்துள்ள ஓட்டுனர்கள் தேவைப்படுவதால் அவர்களை ஒப்பந்த பணியின் அடிப்படையில் பணி அமர்த்த அரசுக்கு சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 120 ஓட்டுநர்களும், காரைக்குடியில் 10 ஓட்டுநர்களும் என 12 பணிமனைகளில் மொத்தம் 400 ஓட்டுநர்கள் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு வயது வரம்பு 24 லிருந்து 45 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!