விரைவில் திருமணத்துக்கு தயாராகும் மதன் & ரேஷ்மா ஜோடி – வைரலாகும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!

0
விரைவில் திருமணத்துக்கு தயாராகும் மதன் & ரேஷ்மா ஜோடி - வைரலாகும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!
விரைவில் திருமணத்துக்கு தயாராகும் மதன் & ரேஷ்மா ஜோடி - வைரலாகும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!
விரைவில் திருமணத்துக்கு தயாராகும் மதன் & ரேஷ்மா ஜோடி – வைரலாகும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!

ஜீ தமிழ் சீரியல் மூலம் நிஜ காதல் ஜோடிகளாக மாறிய மதன் மற்றும் ரேஷ்மா இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நட்சத்திர ஜோடி

தமிழ் சின்னத்திரை உலகில் சமீபகாலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு நட்சத்திர திருமணம் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடிக்கு தான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியலில் சக்தி கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ரேஷ்மாவுக்கும் கதாநாயகியின் அக்கா கணவராக சுந்தர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மதனுக்கும் இடையே காதல் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

பிக் பாஸ் வீட்டில் பட்டினமா, கிராமமா விவாதம் – “பிக்பாஸ் சீசன் 5” டுடே எபிசோட் ப்ரோமோ!

இப்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் மதன் – ரேஷ்மா எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான். அதாவது, ‘பூவே பூச்சூடவா’ சீரியல் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் தான் இவர்கள் இருவரும் காதலிப்பதை மீடியாவுக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து வாழ்த்துக்களை பெற்று வந்த இந்த நட்சத்திர ஜோடி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அபி டெய்லர்ஸ்’ என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இணைந்த லட்சுமி அம்மா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தற்போது திருமணத்துக்கு தயாராகி கொண்டிருக்கும் மதன் – ரேஷ்மா ஜோடி, சமீப காலமாக ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நீல நிற குர்தா மற்றும் கவுன் அணிந்து மதன், ரேஷ்மா இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனுடன் இந்த காதல் ஜோடியின் திருமணத்துக்கு வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!