மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இணைந்த லட்சுமி அம்மா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இணைந்த லட்சுமி அம்மா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இணைந்த லட்சுமி அம்மா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இணைந்த லட்சுமி அம்மா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விலகிய நடிகை ஷீலா தற்போது ஒரு கொண்டாட்ட நிகழ்வில் தனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கிய சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் முதன் முதலாக பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து துவங்கப்பட்ட இந்த சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சொல்லப்போனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் அனைவருக்கும் தெரிந்த அண்ணன், தம்பிகளுக்கிடையே இருக்கும் பாசம், ஒற்றுமை மட்டும் தான்.

‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க டூ பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சியின் சினிமா பயணம் – 40 வயதில் வந்த வாய்ப்பு!

இந்த ஒன் லைன் கதைக்களத்தை ஒவ்வொரு நாள் எபிசோடிலும் மிக ஸ்வாரசியமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததன் மூலம் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளனர். அப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றாக கருதப்பட்டது நடிகை ஷீலாவின் லட்சுமி அம்மா கதாப்பாத்திரம். ஏற்கனவே சின்னத்திரையில் மிகவும் பரீட்சயமான நடிகை ஷீலாவுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒரு முக்கிய அடையாளத்தை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பயணித்து வந்த நடிகை ஷீலா சமீபத்தில் அந்த சீரியலை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், நடிகை ஷீலா இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவாக இருக்க மாட்டார் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அவர் மீண்டுமாக இந்த சீரியலில் இணைந்துள்ளார்.

மீனாவை புகழ்ந்து தள்ளும் ஐஸ்வர்யா, மகிழ்ச்சியில் மீனா- குழப்பத்தில் கண்ணன்!

அதாவது வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதில் நடிகை ஷீலாவும் கலந்து கொண்டுள்ளார். இது தவிர ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தீபாவளி கொண்டாட்டத்தில் மற்ற சீரியல், நடிகர் நடிகைகள் சேர்ந்து அவருக்கு மரியாதையை செய்துள்ளனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் லட்சுமி அம்மாவை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!