தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை டிச.21ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நிலையங்களிலும் மாவட்ட வாரியாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாமல் இருக்கவும், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாகவும் பழுதான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்து அந்தந்த மின்வாரிய செயற்பொறியாளரால் செய்திதாள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு – 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

அந்த வகையில் அழகர் கோவில் பகுதிக்கு அருகில் உள்ள காஞ்சரம்பேட்டை உயர் மின்னழுத்த பாதையில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுரை கிழக்கு வட்ட செயற்பொறியாளர் மு.ராஜாகாந்தி செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். அவ்வாறு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் அழகர்கோவில், காஞ்சரம்பேட்டை, வெளிச்சநத்தம், பெரியப்பட்டி, சின்னப்பட்டி, சீகுபட்டி, சத்திரப்பட்டி, கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி மற்றும் வெள்ளியங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்தியாவில் கிடுகிடுவென உயரும் ஓமைக்ரான் பாதிப்பு – 153 பேருக்கு தொற்று உறுதி!

அவ்வாறு மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை டிச.21ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் உரிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்ட மின்வாரிய செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here