கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரிபார்க்க மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை கோவையில் உள்ள சோமையம்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் முறையாக சரி செய்து பராமரிக்கப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் அனைத்தும் மாதந்தோறும் பராமரிப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை கோவையில் உள்ள சோமையம்பாளையம், தொண்டாமுத்தூர், சீரநாயக்கன்பாளையம், தேவராயபுரம், டாட்டா பாத் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கோபியை பற்றிய அனைத்து உண்மையையும் ஈஸ்வரியிடம் கூறிய எழில் – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் மின்சாரம் பெறும் பகுதிகளான கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், EB காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான குரியோ கார்டன், மாதவன் நகர், அருண் நகர், டாட்டா நகர், சின்மயா நகர், கே எம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான தாளியூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் சிலமனூர், பிஜி புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாட்டா பாத் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு பகுதி, நாராயண குரு ரோடு, சாய்பாபா கோவில், மனை இயல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், கே கே புதூர் வீதி 1 முதல் 8 வரை பாரதி பார்க்| ஒன்னு ரெண்டு பாரதி பார்க் கிராஸ், ஒன்னு ரெண்டு மூணு ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பா கவுண்டர் சாலை, சி எஸ் டபிள்யூ மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திரையரங்குகள் மூடல்? அரசு விளக்கம்! உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான ரங்கே கவுண்டர் சாலை, சுக்குவார்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியர் மாளிகை, விமானப்படை கல்லூரி, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதியில், டாடாபாத், அழகப்ப செட்டியார், சாலை 100 அடி சாலை, சிவானந்த காலனி, ஹெட்கோ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 30) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்று மின்வாரிய பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!