ஏப்.18 ம் தேதி மாலை 6 மணி வரை தபால் வாக்கு பதிவு – தேர்தல் அதிகாரி தகவல்!

0
ஏப்.18 ம் தேதி மாலை 6 மணி வரை தபால் வாக்கு பதிவு - தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தின் தபால் வாக்குப்பதிவுக்கான நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தலைப்பை தேர்தல் அதிகாரி வெளியிட்டு உள்ளார்.

தபால் வாக்குப்பதிவு:

நடப்பு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் தபால் வாக்கு பதிவு முறையில் தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தபால் வாக்குப்பதிவு விருப்ப விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு பெறப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஊழியர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்ல இயலாத காரணத்தினால் அவர்களுக்கும் தபால் வாக்குப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Medical Officer வேலை – சம்பளம்: ரூ.1,25,000/-|| உடனே விரையுங்கள்!

அதன்படி ஏப்ரல் 18ஆம் தேதி நாளை மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா  சாகு  தெரிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!