தமிழகத்தில் பூக்களின் விலை திடீர் வீழ்ச்சி – காரணம் இதுவா?

0
தமிழகத்தில் பூக்களின் விலை திடீர் வீழ்ச்சி - காரணம் இதுவா?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருப்பதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பூக்களின் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பூக்கள் விலை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதனால் காய்கறி மட்டுமில்லாமல் பூக்களின் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாதம் திருவிழாக்கள் அதிகமாக வந்ததால் பூக்களின் விலையானது சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் இந்த மாதம் பூக்களின் விலை குறைந்து இருக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை  மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலையானது கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Medical Officer வேலை – சம்பளம்: ரூ.1,25,000/-|| உடனே விரையுங்கள்!

அதாவது முன்னதாக ஒரு கிலோ ரூ.1000க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ 4 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்து ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கிலோ ரூ. 500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடுமையான வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் வியாபாரிகள் கவலையில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!