Post Office ன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 40 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்ஸ்!

0
Post Office ன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 40 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
Post Office ன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 40 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
Post Office ன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 40 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்ஸ்!

இந்திய அஞ்சல் துறையின் திட்டம் மூலம் கணக்குதாரர் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலம் ரூ. 40 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இத்திட்டத்தின் வட்டி வீதம் மற்றும் முதிர்வு காலம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிஎப்:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். அத்தகைய காலகட்டத்தில் இதுவரை சேமிப்பு செய்யாதவர்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர். இந்த நிலையில் மக்கள் வருங்காலத்தை எண்ணி சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டினர். இவர்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது வங்கிகளை தொடர்ந்து அஞ்சல் துறையில் பல்வேறு வகையான புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 40 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.417 என ஒதுக்கினால், ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் அல்லது மாதம் ரூ.12,500 சேமிப்பீர்கள்.15 ஆண்டுகள் அல்லது முதிர்வு காலம் வரை நீங்கள் ரூ.22.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்துடன், முதிர்ச்சியின் போது கூட்டுத் தொகையும் வழங்கப்படும். அதாவது 7.1% வட்டியில் ரூ.18.18 லட்சம் வட்டித்தொகையாக கிடைக்கும். இறுதியில் மொத்த தொகை ரூ.40.68 லட்சம் கிடைக்கும்.

சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட எந்தவொரு இந்திய குடிமகனும் பிஎப் கணக்கை தொடங்கலாம். அடையாளச் சான்று – வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை தேவைப்படும். அஞ்சல் அலுவலக PPF கணக்கில் பெறப்படும் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று செலுத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!