பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் – ரசிகர்கள் வாழ்த்து!

0
பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் - ரசிகர்கள் வாழ்த்து!
பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் - ரசிகர்கள் வாழ்த்து!
பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் – ரசிகர்கள் வாழ்த்து!

ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் ஹீரோவாக சிவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் கார்த்திக் வாசு. இவரது 3வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பூவே பூச்சூடவா:

2017ல் ஒளிபரப்பாக தொடங்கிய பூவே பூச்சூடவா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஹீரோவாக சக்தி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் வாசு நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக சக்தி கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்துள்ளார். இந்நிலையில் ஹீரோ கார்த்திக் 2018 ஆம் ஆண்டு நந்துஜெய் என்பவரை திருமணம் செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் அவருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர்களது திருமண நாளை கார்த்திக் வாசு, மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அங்கு மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இன்றுடன் 3வது ஆண்டு திருமண நாளை நிறைவு செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

4வது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வனிதா – கணவன் பெயரின் முதல் எழுத்து!

மேலும் அவர் இந்த நல்ல நாள் நல்ல தொடக்கமாக அமைத்திருப்பாகவும், விரைவில் புதிய புரொஜெக்டுகள் குறித்த அறிவிப்பை தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரைப் போலவே மனைவி நந்துஜெய்யும், கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி, இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலானது எனத் தெரிவித்துள்ளார். மகன் ரிஷானுடன் 3வது திருமணநாளை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி, நீயே என் வாழ்க்கை, நீ இன்றி நானில்லை, ஐ லவ்யூ கார்த்திக்வாசு என பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் இன்று காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்!

அவர்களுக்கு பூவே பூச்சூடவா சீரியல் நடிகர்களான கிருத்திகா லட்டு, தனலட்சுமி சிவா, ரேவதி ஞானமுருகன், ஈஸ்வர் ரகுநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர் சின்னத்திரையில் ஓவியா சீரியலில் சரவணனாகவும், பிரியமானவளிள் பிரபா, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!