தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 – முக்கிய கோரிக்கை!

1
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 - முக்கிய கோரிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 - முக்கிய கோரிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்னும் சில தினங்களில் கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் வையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கம் வழங்கும் விதமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு ரூ.5000:

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் மளிகை பொருட்கள் என 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் ஒரு முழு கரும்பும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரொக்கமும் சேர்த்து விநியோகம் செய்யப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பில் பொங்கல் பரிசுப்பணம் இடம்பெறவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை ரொக்கப்பணம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணமாக ரூ.5000 ரொக்கம் வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் டிவி ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

மேலும் தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு மஞ்சள் துணிப்பையில் இடம்பெற்றுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்ற வாசகத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆட்சியின் போது முக ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 பொங்கல் பரிசாக வழங்க கோரிக்கை வைத்தார். தற்போது முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருப்பதால் அக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!