விஜய் டிவி ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி மற்றும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து இணைந்து ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ என்ற புதிய சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

நம்ம வீட்டு மாப்பிள்ளை:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்குமே மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் அளவிற்கு கதை உடன் ஒன்றி இருக்கும். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி. அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். சினிமா வாய்ப்புகள் அதிகமாக அவருக்கு வருவதால் சீரியலில் இருந்து கொண்டே அந்த படங்களில் நடிக்க முடியவில்லை.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021-22 | விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார். இந்நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஜோடியாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இவரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் கண்ணம்மா ரோஷினி மற்றும் ராஜா ராணி 2 சித்து இணைந்து விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியலில் நடிக்க இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த சீரியலுக்கு “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான ஜோடியை சின்னத்திரையில் பார்க்க ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் இது அதிகாரப்பூர்வ ப்ரோமோ இல்லை. அதனால் இது உண்மை இல்லை என தெரிந்தும் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!