தமிழகத்தில் ஜன.16 ரேஷன் கடைகள் இயங்குமா? – முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் ஜன.16 ரேஷன் கடைகள் இயங்குமா
தமிழகத்தில் ஜன.16 ரேஷன் கடைகள் இயங்குமா? – முக்கிய தகவல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகத்தை முன்னிட்டு ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்னதாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பணிக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் வேலை நாளாக செயல்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முழுமையாக பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்வதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனைத்து ரேஷன் கடைகளும் வேலை நாளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!