நைனிடால் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2024 – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
நைனிடால் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2024 - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

நைனிடால் வங்கியில் (Nainital Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Chief Risk Officer, Chief Financial Officer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் நைனிடால் வங்கி (Nainital Bank)
பணியின் பெயர் Chief Risk Officer, Chief Financial Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:

நைனிடால் வங்கியில் (Nainital Bank) காலியாக உள்ள Chief Risk Officer பணிக்கென 01 பணியிடமும், Chief Financial Officer பணிக்கென 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

CRO / CFO கல்வி தகுதி:

CA, CMA, CFA, MBA, Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

CRO / CFO அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணவும்.

CRO / CFO வயது வரம்பு:

Chief Risk Officer பணிக்கு 35 வயது முதல் 55 வயது வரை என்றும்,

Chief Financial Officer பணிக்கு 40 வயது முதல் 55 வயது வரை என்றும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Nainital Bank ஊதியம்:

இந்த நைனிடால் வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Scale IV / V என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Nainital Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Nainital Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த நைனிடால் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 08.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!