செப் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!
புதுச்சேரியில் செப்டம்பர் 15ம் தேதி வரை முன்னதாக ஊரடங்கு நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும், செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும், தளர்வுகள் அளிக்கப்பட்டும் வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகமாக உள்ள மாநிலங்களில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்து செயல்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!
இந்நிலையில், முன்னதாகவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதியான இன்று வரை அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரங்கு அறிவிப்பின் இறுதி நாளான இன்று மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், அங்கு இரவு 10 மணி வரை மதுபான கடைகளும், உணவகங்கள் இரவு 11 மணி வரையும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.