கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!

0
கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி - மாநில சுகாதாரத்துறை அறிக்கை!
கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி - மாநில சுகாதாரத்துறை அறிக்கை!
கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை:

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு அதி தீவிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பு ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகளினால் விரைவில் பாதிப்பு குறைக்கப்பட்டது. ஆனால் கேரளா மாநிலத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையிலேயே உள்ளது. கடந்த வாரத்தில் தினசரி பாதிப்பு 30,000 ஆக இருந்த நிலையில், இந்த வாரத்தில் 20,000 ஆக குறைந்துள்ளது.

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் ஏலம் – டாடா நிறுவனத்தின் முயற்சி!

பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சுகாதாரக்குழுவினரை கேரளா மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக முதல்வர் பிரனாயி விஜயன் தலைமையில் கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, மாநிலத்தின் பாதிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. மாநிலத்தின் தொற்று சதவீதம் 15.12 ஆக உள்ளது. இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,779 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், ஜூன் 18 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை 9195 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்து உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தாமதம் ஆனால் இந்த நாட்களில் மொத்தம் 2799 பேர் இறந்து உள்ளனர். இது 30.44 சதவீதம் ஆகும். இவர்களில் பெரும்பாலானோருக்கு இணை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களில் 514 பேர் வீட்டிலேயும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 146 பேரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாளில் 794 பேரும், 2வது நாளில் 704, 3வது நாளில் 640 பேரும் மரணமடைந்து உள்ளனர் என்று அரசின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!