பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரம் இதோ!

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரம் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரம் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரம் இதோ!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி,வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் இழந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை அலுவலகத்தில் உள்ள பியூன் பணியிடத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் அத்துடன் ஆங்கிலத்தில் படிக்க, எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அவர்களின் தகுதி மற்றும் ஆங்கிலத்தில் படிக்க, எழுதும் திறன் அடிப்படையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு குறைவான எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளதால் வேலையில்லா இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC ஐஏஎஸ், ஐஎப்எஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – ஜூன் 5ம் தேதி நடத்தப்படும்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து The Deputy Circle Head IHRD). Punjab National Bank, Circle Office Chennai South, PNB Towers, 2nd Floor, No. 46-49, Royapettah High Road, Royapettah, Chennai -600014 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனை பிப்ரவரி 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!