TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (TNPSC) குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் போட்டி தேர்வுகள் அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வந்தனர். TNPSC தேர்வாணையம் 22 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளில் ஒன்றான குரூப் 4 தேர்வின் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு என்பதால் இத்தேர்வை தமிழகத்தில் லட்சகணக்கான மக்கள் எழுதுகின்றனர்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ – கடுப்பான ரசிகர்கள்!

இத்தேர்வு எழுத வயது வரம்பு 30 ஆகும் பிற பிரிவினருக்கு வயது 40 ஆகும். மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், வரிதண்டலர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பணியிடங்கள் இந்த குரூப் 4 தேர்வால் நிரப்படுகிறது. தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC ஐஏஎஸ், ஐஎப்எஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – ஜூன் 5ம் தேதி நடத்தப்படும்!

தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழித் தேர்வு ரத்து செய்யப்பட்டு தமிழ்மொழித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழி தேர்வில் 40% மதிப்பெண் பெறுவது கட்டாயமாகும். 40% பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யப்படும் எனவே தமிழ் மொழித்தேர்வு தகுதித்தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!