மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2,000 தவணைத்தொகை பெறவில்லையா? புகார்களை தெரிவிக்கும் எளிய வழிமுறைகள்!

0
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2,000 தவணைத்தொகை பெறவில்லையா? புகார்களை தெரிவிக்கும் எளிய வழிமுறைகள்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2,000 தவணைத்தொகை பெறவில்லையா? புகார்களை தெரிவிக்கும் எளிய வழிமுறைகள்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2,000 தவணைத்தொகை பெறவில்லையா? புகார்களை தெரிவிக்கும் எளிய வழிமுறைகள்!

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 11வது தவணைப்பணமான ரூ. 2,000ஐ இதுவரை பெறவில்லை என்றால் ஒரு சில வழிமுறைகளை பயன்படுத்தி இது குறித்து புகார் தெரிவிக்கலாம். இதற்கான முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

PM கிசான் திட்டம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 11வது தவணை நிதிப் பலனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.21,000 கோடி பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது, 11வது தவணையைப் பெறாத பயனாளிகள் தங்களது KYC விவரங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். இல்லையெனில், PM கிசான் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருந்து 11வது தவணைப்பணமாக ரூ.2,000ஐ பெறவில்லை என்றால் இது குறித்து அரசு உதவி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

அந்த வகையில் PM Kisan சேவையின் 011-24300606 என்ற உதவி எண் மற்றும் 18001155266 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். இது தவிர, [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் PM Kisan Yojanaவின் 11வது தவணைக்கான பணம் வராததற்கான காரணத்தை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தவிர, இந்த தொகையைப் பெறாததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று e-KYC ஆகும். அதாவது, பிஎம் கிசான் யோஜனா பயனாளிகள் அனைவரும் மே 31ம் தேதிக்கு முன் கேஒய்சி செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக கிடைத்துள்ள பதிலில், கிஷான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு விவசாயி எந்த காரணத்திற்காகவும் 4 மாத காலத்திற்கு எந்த தவணையையும் பெறவில்லை என்றால், அவர் அந்த 4 மாத காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிதிப் பலனைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவர். இப்போது, அந்த 4 மாத காலத்திற்கான தவணை மற்றும் அடுத்தடுத்த தவணைகளை அவர்கள் எந்த காரணத்திற்காகவும் பெறவில்லை என்றால் விலக்கு அளவுகோல்களுக்குள் வருவதற்கான நிராகரிப்பு காரணமாக தவிர அவர்கள் அனைத்து நிலுவைத் தவணைகளின் பலன்களையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!