தமிழகத்தில் பிப்.19ம் தேதி அரசு விடுமுறை – மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! புகார் எண்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பிப்.19ம் தேதி அரசு விடுமுறை - மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! புகார் எண்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்.19ம் தேதி அரசு விடுமுறை - மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! புகார் எண்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்.19ம் தேதி அரசு விடுமுறை – மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! புகார் எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மறுக்கப்பட்டால்,தொழிலாளர் புகார் அளிக்க எண்கள் பற்றி சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் பணி அதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!

தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நாளன்று, தேர்தல் நடக்கும் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகையில் சேலம் மாநிலத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில் ஏதும், மறுப்பு இருந்தால் புகார் அளிக்கலாம். இது குறித்து பெறப்படும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து(அமலாக்கம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசின் புதிய செயலி!

இந்த அறிவிப்பில் உதவி கமிஷனரை 94892 14157 என்ற எண்ணில் அழைக்கலாம். அதேபோல் பேர்லண்ட்ஸ், 5 ரோடு பகுதியினர், அன்பழகன் – 97873 79061; அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சிக்கு, கிருபாகரன் – 90424 08228; பழைய பஸ் ஸ்டாண்ட், சீலநாயக்கன்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி வாசுகி – 70107 00791; செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி சீனிவாசன் – 94427 38822; திருச்சி பிரதான சாலை, குகை, எருமாபாளையம், கொண்டலாம்பட்டி, ஆட்டையாம்பட்டி இளையராஜா – 82489 38528; அம்மாபேட்டை, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், வீராணத்துக்கு அருண்குமார் – 93445 84351; ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் தாலுகாவுக்கு சிவக்குமார் – 73735 32073; மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவில் சங்கர் – 86809 03516 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!