தடுப்பூசி செலுத்தாவிட்டால் கைது நடவடிக்கை – பிலிப்பைன்ஸ் அரசு எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொது மக்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைது நடவடிக்கை
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பல நாட்டு அரசுகளுக்கு ஒரே தீர்வாக அமைந்துள்ளது என்னவென்றால் தடுப்பூசிகள் தான். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கோவிஷில்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அவை தற்போது பயன்பாட்டிலும் உள்ளது.
தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 23 மின்தடை!
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிலிப்பின்ஸ் அதிபர் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் பொது மக்கள் சற்று கலக்கமடைந்திருந்தாலும், தடுப்பூசி குறித்த பயத்தை போக்கடிக்கவும், பொது மக்களை ஊக்குவிக்கவும் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது தொடர்பாக நேற்று (ஜூன் 21) செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, ‘கொரோனா பேரலை காரணமாக நாடு முழுவதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் அவசரநிலை ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விருப்பமில்லை என்றால், அவர்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளார்.
இது தவிர தடுப்பூசி போட ஒப்புக் கொள்ளாதவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் கறாராக கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளால் பிலிப்பைன்ஸ் மக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர். முன்னதாக அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.