PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் – EPFO பயனர்கள் கவனத்திற்கு!

0
PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் - EPFO பயனர்கள் கவனத்திற்கு!
PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் - EPFO பயனர்கள் கவனத்திற்கு!
PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் – EPFO பயனர்கள் கவனத்திற்கு!

EPFO அமைப்பு தனது பயனர்கள் PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் வசதிகளை குறித்து அறிவித்துள்ளது. அதன் மூலம் பயனர்கள் எவ்வாறு பணத்தை பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம்.

PF கணக்கில் பணம் பெறும் முறை:

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, PF பயனர்கள் தங்களுக்கு பணம் தேவைப்பட்டால் EPFO இல் இருந்து ஒரு லட்சம் ரூபாய் PF பணத்தை நீங்கள் பெறலாம். மேலும் இந்த முறையில் பணத்தை நீங்கள் பெறுவதற்கு எந்த ஆவணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. EPFO சார்பாக, சம்பளம் பெறுபவர்களுக்கு முன்கூட்டிய கோரிக்கையின் கீழ் இந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையில் EPFO, உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட்டால், நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியமாகிறது, இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் செலவுகளை சமாளிக்க முன்பண வசதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை!

முன் கூட்டியே PF பணத்தை திரும்ப பெறுவதற்கு கோரிக்கை வைக்கும் பணியாளர், அரசு / பொதுத்துறை பிரிவு / CGHS குழு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவசர அவசரமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு தான் மருத்துவ கோரிக்கைக்கான விண்ணப்பத்தை நிரப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வேலை நாளில் விண்ணப்பித்திருந்தால், அடுத்த நாளே உங்கள் கணக்கில் பணம் மாற்றப்படும். இந்த பணத்தை நேரடியாக பணியாளரின் கணக்குக்கு அல்லது மருத்துவமனைக்கும் மாற்றலாம். மேலும், முன்பணமாக ரூ.1 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம்.

SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்த வசதியில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் மருத்துவ சீட்டை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் இறுதி பில் முன்பணத்துடன் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், PF கணக்கில் இருந்து முன்னதாக பணத்தை பெறுவதற்கான எளிய முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF பணத்தை முன்னதாக பெறும் வழிமுறைகள்:
  • பயனர்கள் முதலில், www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென உள்ள கோரிக்கை பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • இது தவிர, unifiedportalmem.epfindia.gov.in இலிருந்து இதே கோரிக்கையினை ஆன்லைனில் அனுப்பலாம்.
  • அந்த பகுதியில் நீங்கள் ஆன்லைன் சேவைகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் கோரிக்கையை அனுப்புவதற்கு என்று தனியாக உள்ள (படிவம்-31,19,10C & 10D) ஆகிய படிவங்களை நிரப்ப வேண்டும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.
  • இப்போது நீங்கள் Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், PF அட்வான்ஸ் என்று உள்ள படிவத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் பணம் எடுப்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்.
  • இப்போது நீங்கள் தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும்.
  • இதற்குப் பிறகு உங்கள் முகவரி விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • இப்பொழுது, Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்து, ஆதார் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.
  • இப்போது உங்கள் PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!