SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தற்போதைய ஆன்லைன் பரிவர்த்தனையில் எதிர்பாராத விதமாக உங்கள் டெபிட் கார்டு தொலைந்து விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எளிதாக பிளாக் செய்யலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

டெபிட் கார்டு:

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது முதல் மக்கள் அத்தியாவசிய அவசர தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில அரசுகள் அறிவுறுத்தியது. பொது இடங்களில் ஏதேனும் வேலைகளுக்கு செல்ல போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து ஆன்லைன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய முற்பட்டனர். இதனால் நெட் பேங்கிங் செயல்பாடு அதிகரித்தது. மேலும் வெளி இடங்களிலும் தற்போதைய டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டெபிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!

எல்லா நேரங்களிலும் டெபிட் கார்டு நம் கைகளில் இருக்க வேண்டியது அவசியம். இந்த தேவையுள்ள டெபிட் கார்டை நாம் எதிர்பாராத விதமாக தொலைக்க நேரிட்டால் பணம் இழக்கும் அபாயம் ஏற்படலாம் . இதனை தவிர்க்க உங்கள் டெபிட் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே பிளாக் செய்ய வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டோ அல்லது மொபைல் செயலி மூலமாகவே பிளாக் செய்யலாம். தற்போது எஸ்பிஐ டெபிட் கார்டை பிளாக் செய்யும் வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு,

எஸ்பிஐ டெபிட் கார்டை பிளாக் செய்யும் வழிமுறைகள்
  • எஸ்பிஐ நெட் பேங்கிங் இணையதளத்திற்கு சென்று அதில் ‘e-Services’ டேபில் ‘ATM Card Services’ ஆப்ஷனை தேர்வு செய்து ‘Block ATM Card’ விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில் நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய கார்டின் கணக்கை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக முதல் 4 நம்பர் மற்றும் கடைசி 4 நம்பர் திரையில் தோன்றும்.
  • பிளாக் செய்ய வேண்டிய கார்டை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் டெபிட் கார்டு விவரங்களை சரிபார்த்து SUBMIT கொடுக்கவும்.
  • அடுத்து உங்கள் மொபை எண்ணுக்கு ஒடிபி SEND செய்து அந்த எண்ணை பதிவிட்டு உங்கள் பாஸ்வோட்டை உள்ளீட்டு கன்பார்ம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை முடித்த பிறகு உங்களுக்கு மொபைலுக்கு கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி வரும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!