தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!

கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களது பணியை நிரந்திரமாக்க கூறி கோரிக்கை விடுத்தனர். தற்போது தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பணி நிரந்தரம்:

தமிழக அரசு பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி முதலான பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி என்கிற இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.5000 மட்டும் தான் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இவர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது.

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் பிரான்ஸ் – ரஷ்யாவுக்கு எதிராக ஒன்று கூடும் நாடுகள்! வலுப்பெறும் போர்!

இந்த பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருமே தங்களது பணியை நிரந்தரம் செய்ய கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்தாரர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் தமிழக அரசு இவர்களின் பகுதி நேர வேலையை நிரந்தரம் ஆக்க தயங்கி வந்தனர்.

மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்? மத்திய அரசு உத்தரவு!

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ‘‘பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என திமுக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. திமுக கட்சியினர் ஆட்சிக்கு வந்து கிட்டதட்ட 9 மாதங்கள் ஆகியும் அந்த பணி குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என மீண்டும் பகுதி நேர ஆசிரியர்களிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உடனே நிரந்திரமாக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here