“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்காக ஆட்டோ ஓட்டும் கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யாவிற்காக ஆட்டோ ஓட்டும் கண்ணன் - அவரே வெளியிட்ட வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்காக ஆட்டோ ஓட்டும் கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்த கண்ணன், ஐஸ்வர்யா ஜோடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், விஜே தீபிகா சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணனுடன் இணைந்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னணி சீரியல்கள் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடைசி தம்பி கண்ணன் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நிலையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். ஆனால் அண்ணன்கள் வீட்டிற்கு தெரியாமல் உதவி செய்து வருகின்றனர். கண்ணனுக்கு ஜோடியாக முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அவர் நடிக்கும் போது கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவருக்கு இருந்த முகப்பரு பிரச்சனை காரணமாக அவர் திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கண்ணனாக நடிக்கும் சரவணா விக்ரம் சீரியலில் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், வெளியில் இருவரும் நல்ல நட்புடன் பழகி வருகின்றனர். மேலும் இருவரும் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் ‘பிக் பாஸ்’ ஜுலி – வைரலாகும் வீடியோ!

அதில் இருவரும் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் சரவண விக்ரம் ஆட்டோ ஓட்ட, விஜே தீபிகா பின்னால் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் நல்ல ஜோடி விரைவில் இணைந்து நடிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். யூடுப் கன்டென்ட் வேண்டும் என்பதற்காக ஏற்கனவே அவர் ஆட்டோ ஓட்டி வீடியோ பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!