கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் ‘பிக் பாஸ்’ ஜுலி – வைரலாகும் வீடியோ!

0
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் 'பிக் பாஸ்' ஜுலி - வைரலாகும் வீடியோ!
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் 'பிக் பாஸ்' ஜுலி - வைரலாகும் வீடியோ!
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் ‘பிக் பாஸ்’ ஜுலி – வைரலாகும் வீடியோ!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ‘பிக்பாஸ்’ ஜுலி வீடு வீடாக சென்று உணவு பொருட்களை கொடுத்து உதவி செய்யும் வகையில் சில வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஜுலி

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையுடன் சேர்த்து வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் அதி தீவிரம் அடைந்த மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு இடங்களுக்குள் நுழைந்ததால் பலரது அன்றாட வாழ்வு முடக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி யார் தெரியுமா? பிசினஸ் டூ சினிமா வாய்ப்பு!

இதற்கு மத்தியில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதிகளை அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் என முக்கிய பிரபலங்கள் பலரும் பார்வையிட்டு தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ‘பிக்பாஸ்’ பிரபலம் ஜுலி உணவு பொருட்களை கொடுத்து உதவி செய்வது போல சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்திய அளவிலான டாப் 10 சேனல்களின் லிஸ்ட் வெளியீடு – சன் டிவி முதலிடம்! பின் தங்கிய விஜய் டிவி!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜுலி தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக சமூக சேவையில் ஆர்வம் கொண்ட ஜுலி சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்களை கொடுத்து உதவி செய்திருக்கிறார். வெள்ள நீரில் ஒரு வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு பொருட்களை கொடுத்து வரும் ஜுலியின் இந்த காணொளி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!