“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிருடன் இணைந்த கண்ணன்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கதிருடன் இணைந்த கண்ணன்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிருடன் இணைந்த கண்ணன்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அனைவரும் எதிர்பார்த்தது போல கண்ணன் தனம் வீட்டிற்கு அழைத்து வந்ததை அடுத்து பல திருப்பங்கள் கதையில் வர இருக்கிறது. இந்நிலையில் கண்ணன் கதிருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி பாசத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. அந்த வகையில் சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை கொண்டுவந்து வித்தியாசமான கதையால் அதிகமான ரசிகர்களை ஈர்த்த சீரியல் தான் விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இதில் அண்ணன் தம்பிகள் என நான்கு பேர் ஒற்றுமையாக இருக்க அவர்களின் மனைவிமார்களும் குடும்பத்தின் ஒற்றுமைக்காக பொறுமையாக இருக்கின்றனர். இந்நிலையில் கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்ததால் வீட்டில் ஒற்றுமை உடைகிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | ராஜுவின் பதிலால் கோபமடையும் அக்ஷரா, ரசிகர்கள் ஷாக்!

கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மூத்த அண்ணன் மூர்த்திக்கு தெரியாமல் மற்ற அண்ணன்கள் அவருக்கு உதவி செய்கின்றனர். இந்நிலையில் கண்ணன் அடிபட்டு இருக்க பொறுக்க முடியாமல் மூத்த அண்ணி தனம் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். மூர்த்தி பிடிக்காதது போல நடந்து கொண்டாலும் மனதிற்குள் சந்தோசமாக இருக்கிறார். இந்நிலையில் புதிதாக வந்த ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் என்ன மாதிரி மாற்றங்கள் நடைபெறும் என்பதே கதையில் மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி பாரதியை மிரட்டும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் கண்ணன் கதாபாத்திரத்தில் லட்சுமி அம்மா இறப்பிற்கு மொட்டை அடித்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பலரது பாராட்டை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!