கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அண்ணன்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அண்ணன்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் ஐஸ்வர்யா - இன்றைய
கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அண்ணன்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அண்ணன்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடைசி வரை கண்ணனிற்காக அண்ணன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கண்ணன் வருவதற்குள் கொல்லி வைத்துவிடுகின்றனர். கடைசிவாராயோ அம்மாவை பார்க்காமல் இருக்கும் கண்ணனை ஐஸ்வர்யா கூட கொஞ்சம் கோவப்படும் படி பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனிடம் ஐஸ்வர்யா அம்மாவை எடுத்துவிட்டு போய்ட்டாங்க இந்நேரம் கொல்லி வைத்திருப்பாங்க என சொல்கிறார். மறு பக்கம் சுடுகாட்டில் கண்ணனிற்கு தகவல் தெரிவிக்க முடியவில்லையா என ஜீவா கேட்கிறார். ட்ரைவர் போன் எடுக்கவில்லை என சொல்ல, அவன் இப்போ விட்டால் எப்போது பார்க்க முடியும் என மூர்த்தி சொல்கிறார். ஆனால் இதற்கு மேல் வைத்திருக்க முடியாது என பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கண்ணன் வராமல் எதுவும் செய்ய முடியாது என சொல்ல சாயங்காலத்திற்கு மேல் ரொம்ப நேரம் வைத்திருக்க கூடாது என அனைவரும் சொல்கின்றனர். அம்மா முகத்தை பார்க்க வேண்டும் என்பதால் ஓடி வருகிறார். சுடுகாட்டில் சடங்குகள் தொடங்குகின்றனர். கண்ணன் ஓடி வருவதற்குள் மூர்த்தி கொல்லி வைத்துவிடுகிறார். உடனே கண்ணன் கடைசி வரை அம்மாவை பார்க்க முடியவில்லை என நினைத்து கதறி அழுகிறார்.

கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி, பதட்டத்தில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

சண்முகம் அவரை பிடிக்க ஆனால் அவர் என் அம்மாவை கடைசி வரை காட்டவில்லையே என சொல்லி அழுகிறார். பின் மூர்த்தி கதிர் ஜீவா குளித்துவிட்டு கிளம்ப கண்ணன் அழுதுவிட்டு வரட்டும் என சொல்லி காத்திருக்கிறார். பின் வீட்டிற்கு வர அம்மா இல்லாத இடம் போல இல்லை, இருப்பது போலவே இருக்கிறது என ஜீவா சொல்கிறார். பின் கயல் பாப்பா அழ, மூர்த்தி அவரை தூக்கி வைத்துக் கொள்கிறார். உன் உருவத்தில் தான் அம்மாவை நாங்க பார்க்கிறோம் என சொல்லி கொஞ்சுகிறார்.

பின் கண்ணனை தேடி ஐஸ்வர்யா வர, அம்மா முகத்தை பார்த்தியா என கேட்கிறார். கடைசி வரை என்னை பார்க்க விடவில்லை என கண்ணன் சொல்ல, நானே என் அம்மாவை கொன்னுட்டேன் என அழ, எல்லாரும் சேர்ந்து கடைசியில் உன்னை பார்க்கவிடாமல் பண்ணிட்டாங்க என ஐஸ்வர்யா சொல்கிறார். உடனே கண்ணன் கோவப்பட, உன்னை கடைசியாக மருத்துவமனையில் பார்க்கவிட்டிருக்கலாம் என சொல்ல, இனிமேல் அம்மாவை நான் பார்க்க முடியாது என கண்ணன் சொல்ல,

சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷா – அதுவும் இந்த சேனலில்!

ஐஸ்வர்யா அவங்க உன்னை பார்க்க விடக்கூடாது என முடிவு செய்துவிட்டார்கள் ஒரு அரை மணி நேரம் காத்திருந்தால் நீ வந்திருப்ப என ஐஸ்வர்யா சொல்கிறார். நீ இல்லாமலே எல்லா சடங்கும் செய்ய தொடங்கிவிட்டார்கள் என சொல்கிறார். நான் எல்லாவற்றிலும் கலந்து கொள்ள சென்றேன் ஆனால் என்னையும் துரத்திவிட்டார்கள். என்னை விடு உன்னை பார்க்க விட்டிருக்கலாம் என சொல்ல கண்ணன் கோபத்தின் உச்சியில் செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!