
குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் முல்லை கதிர், வீட்டிற்கு வரும் லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் கண்ணனிடம் நகை வாங்கலாம் கடைக்காரர் பணம் கொடுக்கிறார். அதற்கு மாசம் வட்டி வேண்டும் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் அம்மா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே ஒரு மாசமாக இருக்கும் பெண் வருகிறார். அவரை பார்த்ததும் கதிரும் முல்லையும் சந்தோசப்படுகின்றனர். நானும் இப்படி மாசமாக இருந்தால் என்னை நன்றாக பார்த்து கொள்வீர்களா என முல்லை கேட்கிறார். அப்போது நான் எப்படி பார்த்துக் கொள்வேன் என பாரு, உனக்கு வலி வரும் போது நானும் உள்ளே வருவேன் என கதிர் சொல்கிறார்.
எனக்கு இப்பவே மாசமாக இருக்கனும் போல உள்ளது என முல்லை சொல்கிறார். உடனே கதிர் அவரை பார்க்க அவர் வெட்கபட்டு கொண்டு செல்கிறார். பின்னர் கண்ணன் நகையை கொடுத்த பதட்டத்தில் வருகிறார். கடையை பார்த்ததும் தான் நிம்மதி அடைகிறார். அப்போது நகைக்கடைக்காரர் ரூபாய் 10000 கொடுத்து நகையையும் கொடுக்கிறார். நகை எதற்கு கொடுக்குறீங்க என கேட்க நீ மூர்த்தியின் தம்பி தான உன் நகைக்காக இல்லை. உன் அண்ணன் மீதுள்ள நம்பிக்கையால் கொடுக்கிறேன் என சொல்கிறார்.
இன்னும் நான் அண்ணன் தயவில் தான் இருக்கிறேன் என சொல்லி கண்ணன் வருத்தப்படுகிறார். பின்னர் லட்சுமி அம்மா வீட்டிற்கு வருகிறார். கயல் பாப்பாவை கொஞ்சி விட்டு பசங்களை நினைத்து பெருமைப்படுகிறார். உடனே அவர் அழ என்னாச்சு என தனம் கேட்கிறார். ஒன்றுமில்லை தனம் இவ்வளவு நாள் குடும்பத்தை விட்டு மருத்துவமனையில் இருந்ததால் அவருக்கு கவலை என சொல்கிறார். மீனா ஜீவாவை தூங்க விடாமல் செய்ய ஜீவா கல்யாணம் நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறார்.
கணவர் நாகசைதன்யாவை பிரியும் சமந்தா? இன்ஸ்டா பதிவு மூலம் பதிலடி!
எல்லாம் நல்லதுக்கு தான் என மீனா சொல்ல ஜீவா நக்கலடித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருவரை ஒருவர் நக்கலிடித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். வெளியே வந்து பாரு எத்தனை பொண்ணுங்க என்னை பார்க்கிறார்கள் என சொல்கிறார். உடனே மீனா அதற்கும் நக்கலடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.