ஐஸ்வர்யாவின் பார்லரை திறந்து வைத்த தனம், புது சமையல் ஆர்டரை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் – இன்றைய எபிசோட்!

0
ஐஸ்வர்யாவின் பார்லரை திறந்து வைத்த தனம், புது சமையல் ஆர்டரை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் - இன்றைய எபிசோட்!
ஐஸ்வர்யாவின் பார்லரை திறந்து வைத்த தனம், புது சமையல் ஆர்டரை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் - இன்றைய எபிசோட்!
ஐஸ்வர்யாவின் பார்லரை திறந்து வைத்த தனம், புது சமையல் ஆர்டரை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா புது பார்லர் தனம் கையால் திறந்து வைக்கிறார். மறுபக்கம் கதிர் புது சமையல் ஆர்டர் வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் ப்ரோக்கர் மூர்த்தியை புது ஆளுடன் பார்க்க வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா குடும்பத்தில் அனைவருக்கும் மோமோஸ் செய்து கொடுக்கிறார். அதை மூர்த்தி சாப்பிட்டுவிட்டு அருமையாக இருப்பதாக சொல்ல உண்மையாகவா என ஜீவா கேட்கிறார். ஆமாம் என மூர்த்தி சொல்ல இது பெயர் என்ன என மூர்த்தி கேட்கிறார். இது பேர் மோமோஸ் என சொல்ல, பேசாமல் சிக்கன் கொழுக்கட்டை என பெயர் வைக்கலாமா என மூர்த்தி கேட்கிறார். எல்லாம் நம்ம இஷ்டம் தான் என மீனா சொல்ல, கண்ணனும் ஐஸ்வர்யாவும் அருமையாக இருப்பதாக சொல்கிறார். ஜீவா ஐஸ்வர்யா சொன்னதை பார்த்து அதிர்ச்சி அடைய மீனா என்னடா ஜீவா எதுவும் சொல்லாமல் இருக்கிறாய் என கேட்கிறார். உடனே ஜீவா சாப்பிட்டுவிட்டு அருமையாக இருப்பதாக சொல்ல, அனைவரும் போட்டி போட்டு சாப்பிடுகின்றனர்

பின் எல்லாரும் அருமையாக இருப்பதாக சொல்லி மீனாவை பாராட்டுகின்றனர். அப்போது கண்ணன் அது சரி நைட் என்ன சாப்பாடு என கேட்க மீனா இது தான் சாப்பாடு என சொல்கிறார். அனைவரும் இது எப்படி போதும் என கேட்க இது போதவில்லையா என மீனா கேட்கிறார். மூர்த்தி எதோ வடை சாப்பிடுவது போல தான் இருந்தது என சொல்ல, பயங்கரமாக பசிப்பதாக மூர்த்தி சொல்கிறார். உடனே தனம் சென்று அனைவருக்கும் இட்லி ஊற்றுகிறார். மீனா அனைவருக்கும் இது போதும் என நினைத்ததாக சொல்ல, தனம் கொழுக்கட்டை போல கொடுத்தால் எப்படி பத்தும் என கேட்கிறார், அவங்க வேலை எல்லாம் அப்படி என தனம் என சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா அதெல்லாம் நம்மை போல உழைப்பவர்களுக்கு தான் தெரியும் என சொல்ல, மீனா நான் அமைதியாக தான் இருந்தேன் என சொல்கிறார். உடனே தனம் சமாதானம் செய்ய தனம் எல்லாருக்கும் வேலை கொடுக்கிறார்.

மறுபக்கம் கதிருக்கு கஸ்டமர் ஒருவர் போன் செய்து சமையல் ஆர்டர் பற்றி சொல்கிறார். கதிர் 2 நாட்கள் முன்னாடி சொன்னால் நன்றாக இருக்கும் என சொல்ல, நாங்க கடையில் கை பக்குவத்தில் அரைத்து செய்கிறோம் என சொல்கிறார். சரி என அந்த கஸ்டமர் சொல்ல, முல்லையிடம் கதிர் விவரத்தை சொல்கிறார். முல்லை அந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார். பின் கதிரும் முல்லையும் சந்தோஷமாக கடைக்கு கிளம்புகின்றனர். மறுபக்கம் ஐஸ்வர்யா புது பார்லர் திறக்க ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார். தனம் கஸ்தூரி, தனத்தின் அம்மா என அனைவரும் இருக்கின்றனர்.

தமிழக கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !

கஸ்தூரி வீட்டு ஆளுங்க எங்கே என கேட்க அவங்க முக்கியமான வேலையாக வெளியே சென்று இருப்பதாக சொல்கிறார். நல்ல நேரத்திற்குள் கடையை திறக்கலாம் என சொல்ல, ஐஸ்வர்யா தனத்தை ரிப்பன் கட் செய்ய சொல்கிறார். தனம் பாட்டியை கட் செய்ய சொல்லு என சொல்ல கண்ணன் அண்ணி நீங்க சென்று கட் செய்ங்க என சொல்கிறார். பின் தனம் ரிப்பன் கட் செய்ய ஐஸ்வர்யா குத்துவிளக்கு ஏற்ற சொல்கிறார். பின் அனைவரும் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். ஐஸ்வர்யா முதல் நாளில் தனத்திற்கு மேக்கப் போடுவதாக சொல்ல ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார். பின் கஸ்தூரிக்கும் தனத்தின் அம்மாவிற்கும் ஐஸ்வர்யா மேக்கப் போடுகிறார். அனைவரும் புது தொழில் தொடங்கியதை நினைத்து சந்தோசப்படுகின்றனர். பின் மூர்த்தி வீட்டை பார்க்க புது ஆள் ஒருவர் வருகிறார். அப்போது அவர் எனக்கு இடம் தான் வேண்டும் வீட்டை இடித்து கட்ட தான் போகிறேன் இடத்திற்கும் வீட்டிற்கும் சேர்ந்து 65 லட்சம் கொடுக்கிறேன் என அவர் சொல்கிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!