கதிரை வீட்டில் தங்க சொல்லும் முல்லையின் அப்பா, மீனாவிடம் சண்டை போட்ட ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிரை வீட்டில் தங்க சொல்லும் முல்லையின் அப்பா, மீனாவிடம் சண்டை போட்ட ஜீவா - இன்றைய
கதிரை வீட்டில் தங்க சொல்லும் முல்லையின் அப்பா, மீனாவிடம் சண்டை போட்ட ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிரை வீட்டில் தங்க சொல்லும் முல்லையின் அப்பா, மீனாவிடம் சண்டை போட்ட ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வீட்டை விட்டு வெளியே போனதை நினைத்து தனம் அழுகிறார். மறுபக்கம் கதிரை முல்லை அம்மா இங்கேயே தங்க சொல்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என சொல்கிறார். பின் மீனா மீண்டும் ஜீவாவிடம் சண்டை போட ஜீவா எல்லா பிரச்சனைக்கும் மீனாவின் அப்பா அம்மா தான் காரணம் என சொல்கிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் எப்படி வீட்டை விட்டு வெளியே போவான் என தனம் வருத்தப்படுகிறார். நாம என்ன பண்ணோம் ஏன் நம்மை விட்டு போனான் என தனம் அழ ஐஸ்வர்யா வருத்தப்படுகிறார். கண்ணன் விட்டு போனதை என்னால் தாங்க முடியாமல் இருந்தது ஆனால் இப்போது கதிர் எப்படி போவான் என தெரியாமல் தனம் இருக்கிறார். பின் கதிரும் முல்லையும் முல்லையின் அம்மா அப்பா வீட்டிற்கு வருகின்றனர். கதிருக்கு தண்ணீர் கொடுக்க ஆனால் கதிர் அதை வாங்கவில்லை.

TN Job “FB  Group” Join Now

பின் கதிர் முல்லையை இங்கேயே தங்க சொல்லி முல்லையின் அப்பா சொல்கிறார். இதுவும் உங்க வீடு தான் நீங்க அதற்காக இப்படி யோசிக்க வேண்டாம் என சொல்கிறார். முல்லை அம்மா சாப்பாடு செய்யவா என கேட்க ஆனால் முல்லை வேண்டாம் என சொல்கிறார். பின் முல்லை அப்பா அடுத்து என்ன செய்ய இருக்கீங்க என கேட்க எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை என சொல்கிறார். முல்லையை அருகே வைத்திருக்க நினைப்பது சரி தான் ஆனால் இன்று அதெல்லாம் மாறிவிட்டது.

நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது நடந்துவிட்டது. ஆனால் இது சரியான முடிவா என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன். நான் சொல்வது எல்லாம் உங்களுக்கு புரியும் என நான் நம்புகிறேன். ஆனால் இங்கே இருப்பது சரியாக வராது என்னுடைய முடிவால் வந்த பிரச்சனைகளை நானே சமாளிப்பேன் என சொல்கிறார். என் முடிவால் முல்லை கஷ்டப்பட மாட்டாள் என சொல்கிறார். முல்லை இனிமேல் கஷ்டப்பட கூடாது என்பதால் தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கேன் என சொல்கிறார்.

பாரதியை சந்தித்து வெண்பாவை மனைவி என சொன்ன சாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஜீவா கதிர் வெளியே போனதை நினைத்து வருத்தப்படுகிறார். மீனா பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். கதிரை எல்லாரும் போக வேண்டாம் என சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க போனை எடுத்து பார்க்கிறார். மீனா ஜீவாவை கூப்பிட ஆனால் அவர் பேசாமல் இருக்கிறார். ஜீவா முடியவில்லை பேசாமல் இரு என சொல்ல ஆனால் மீனா இந்த வீட்டில் இருப்பவர்கள் கோவித்து கொண்டது பத்தாமல் நீ வேற ஏன் இப்படி செய்கிறாய் என சொல்கிறார். மீனா என்னை எல்லார் முன்னாடியும் 2 முறை அடிக்க வந்தாய் என சொல்ல, உனக்கு வேண்டும் என்றால் என்னை அடித்துக் கொள் என சொல்கிறார்.

என் தம்பி வீட்டை விட்டு போய்ட்டான் என சொல்ல மீனா அதற்கு நாம என்ன செய்ய முடியும் என கேட்கிறார். நமக்கும் நிறைய பிரச்சனை நடந்திருக்கு அதை எல்லாம் பார்த்து நாம வீட்டை விட்டு சென்றோமா என கேட்கிறார். என் அப்பா முன்னாடிஎன்னை அடிக்க வருகிறாய் நான் அதற்கு வீட்டை விட்டு போனேனா என கேட்க உனக்கு புரிகிறதா இல்லையா என கேட்கிறார். பணம் செலவு செய்தது உண்மை தான என சொல்ல உன் அப்பா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சொல்கிறார். உன் அப்பா தான் எல்லாத்தையும் ஆரம்பித்தார் என சொல்கிறார்.

பணம் கொடுக்க முடியவில்லை என்றால் முடியாது என சொல்ல வேண்டியது தான ஏன் உன் அப்பாவிடம் சொன்னாய் என கேட்க அவர் நீ பணம் வாங்கியதை பார்த்துவிட்டார் என சொல்கிறார். ஜீவா என் குடும்பம் அப்படி தான் எனக்கு பிரச்சனை வந்தாலும் என் தம்பியும் அண்ணனும் வருவார்கள் என சொல்கிறார். இனிமேல் உன் அப்பா அம்மா இங்கே வர கூடாது என சொல்ல உனக்கு இஷ்டம் இருந்தால் இங்கே இரு இல்லை என்றால் நீயும் உன் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு என சொல்கிறார்.

அப்போது தனம் வந்து ஜீவாவை அமைதியாக இருக்க சொல்ல ஜீவா மனம் உடைந்து அழுகிறார் மீனா அதை பார்த்து வருத்தப்படுகிறார். மூர்த்தி வெளியே இருந்து அதை எல்லாம் பார்த்துவிட்டு இருக்கிறார். தனம் அவன் எங்கேயும் போகமாட்டான் என சொல்கிறார். கதிர் வந்துருவான் என ஆறுதல் சொல்ல, அவனுக்கு எப்படி நம்மை விட்டு போக தோணுச்சு எப்படி மனசு வந்தது என கேட்கிறார். எல்லாம் ஒரு நாள் மாறும் என நாம நம்புவோம் என தனம் ஆறுதல் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here