பார்வதியால் பறிபோன கதிர் வேலை, முல்லையை பார்க்க கயலுடன் வந்த கண்ணன் – இன்றைய எபிசோட்!

0
பார்வதியால் பறிபோன கதிர் வேலை, முல்லையை பார்க்க கயலுடன் வந்த கண்ணன் - இன்றைய எபிசோட்!
பார்வதியால் பறிபோன கதிர் வேலை, முல்லையை பார்க்க கயலுடன் வந்த கண்ணன் - இன்றைய எபிசோட்!
பார்வதியால் பறிபோன கதிர் வேலை, முல்லையை பார்க்க கயலுடன் வந்த கண்ணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மல்லி வீட்டிற்கு வந்து முல்லை நிலைமையை சொல்லி சண்டை போடுகிறார். பின் முல்லை அம்மா கதிர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சண்டை போட அதனால் கதிருக்கு வேலை போய்விடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மல்லி வீட்டிற்கு வந்து அவருடைய அப்பாவிடம் கதிர் ஹோட்டலில் வேலை செய்வதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். என்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டால் அப்பறம் ஊரே சிரிக்குமே முல்லையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என சொல்கிறார். அந்த குடும்பத்தில் இருக்கும் போது கஷ்டப்பட்டாள் இப்போதும் கஷ்டப்படுவதாக சொல்ல, முல்லை அப்பா அவர் வேலை தான செய்கிறார் என சொல்கிறார். பின் முல்லை ஹோட்டலில் டேபிள் துடைப்பது ஒரு வேலையா என கேட்க, அதுவும் வேலை தான என முல்லை அப்பா சொல்கிறார்.

என்னிடம் என் தங்கச்சி புருஷன் என்ன வேலை செய்கிறார் என கேட்டால் நான் என்ன செய்வது என சொல்கிறார். பின் அக்கா நான் வசதியாக இருக்கேன் என் தங்கச்சிக்கு ஏன் இந்த நிலைமை என சொல்ல, முல்லை அம்மா எனக்கு இதே நினைப்பாக இருப்பதாக சொல்கிறார். இதற்கு முன்னதாக சொந்த கடையில் மூட்டை தூக்கினார் இப்போது எச்ச இலை எடுக்கிறார் என சொல்கிறார். அவன் என்ன நல்ல வேலைக்கு போக படித்தா இருக்கிறான் என சொல்கிறார். பின் முல்லை அம்மா அன்னைக்கே கல்யாணம் செய்ய வேண்டாம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் நான் பணம் தருகிறேன் தனியாக தொழில் செய்ய சொல்லு என சொல்ல முல்லை அம்மாவை விட்டு பேச சொல்கிறார். முல்லை அப்பா மல்லியிடம் அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக் கொள்வார்கள் என சொல்ல மல்லி சும்மா இருக்க சொல்கிறார். பார்வதி நம்ம பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம் என சொல்கிறார். பின் முல்லை அம்மா கதிரை பார்க்க ஹோட்டலிற்கு போகிறார். பின் ஓனரிடம் கதிரை வர சொல்லுங்கள் என சொல்ல, கதிர் வர நேரமாகிறது. பின் கதிர் வர நேரமாக முல்லை அம்மா நானே வெளியே சென்று பார்க்கிறேன் என சொல்கிறார்.

ஆனால் ஓனர் போக வேண்டாம் என சொல்ல, ஆனால் கதிர் வருகிறார். கதிர் கோலத்தை பார்த்து முல்லை அம்மா வருத்தப்படுகிறார். சொந்த கடையில் இருந்த போது கூட நல்ல உடை போட்டது இல்லை அதுவாவது சொந்த கடை ஆனால் இங்கே இப்படி இருக்கீங்க என சொல்கிறார். பின் முல்லை அம்மாவை மெதுவாக பேச சொல்ல, எனக்கே இந்த நிலைமையில் பார்க்க கஷ்டமாக இருப்பதாக சொல்ல, நீங்க வீட்டிற்கு போங்க என முல்லை அம்மா சொல்கிறார். பின் கதிரிடம் இந்த வேலை வேண்டாம் என சொல்ல, மல்லி பணம் கொடுக்கிறேன் என சொன்னதாக சொல்கிறார்.

ஆனால் கதிர் பணம் வேண்டாம் என சொல்கிறார். முல்லை அம்மா உங்க குடும்பத்திற்கு வீராப்பு தான் பெரியது நாளைக்கு பணம் தேவை இருந்தால் இந்த வேலை சரியாக வராது என சொல்ல, ஓனர் வந்து வேலை நிறைய இருப்பதாக சொல்கிறார். பின் கதிர் பார்வதியை கிளம்ப சொல்ல, பார்வதி இன்னும் உங்க மாமா வெள்ளை வெட்டி உடன் தான் இருக்கிறார். ஆனால் நீங்க இப்படி எச்ச இலை எடுப்பதாக சொல்கிறார். பின் ஓனர் வந்து கதிரை சத்தம் போடுகிறார். அப்போது முல்லை அம்மா உன் வேலை வேண்டாம் என சொல்கிறார்.

இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டும் என என் மாப்பிள்ளைக்கு தலை எழுத்தா என கேட்டு சண்டை போடுகிறார். பின் முல்லை அம்மா உங்க குடும்பத்தின் புத்தியே இதான் என சொல்லி கிளம்பி செல்கிறார். அப்போது ஓனர் ஜாமீன் குடும்பம் உனக்கு என்னால் வேலை கொடுக்க முடியாது நீ கிளம்பு என சொல்கிறார். பின் கதிர் ஐயோ அண்ணாச்சி அவங்க எதோ பேசிட்டாங்க என சொல்ல, ஆனால் ஓனர் வேலை செய்ததற்கு பணத்தை வாங்கி கொண்டு கிளம்ப சொல்கிறார். ஓனர் பணத்தை கொடுத்து போக சொல்ல கதிர் அவரிடம் கெஞ்சுகிறார்.

கோபியிடம் இனிமேல் ஒழுங்காக இருக்க சொல்லும் ஈஸ்வரி, ராதிகாவை சந்திக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால் ஓனர் கேட்கவில்லை. கதிர் வருத்தத்துடன் கிளம்புகிறார். பின் முல்லை வீட்டில் இருக்க கதிர் வருகிறார். என்ன இந்த நேரத்தில் வந்திருப்பதாக சொல்ல, நீ தான சீக்கரம் வர சொன்னாய் அதனால் தான் வந்தேன் என கதிர் சொல்கிறார். பின் கதிர் சாப்பாடு கொண்டு வர இருவரும் சாப்பிடுகின்றனர். பின் கதிர் வீட்டிற்கு கண்ணன் கயலுடன் வருகிறார். முல்லை கயலை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் மீனா எப்படி குழந்தையை கொடுத்தார் என கேட்க அவங்க எங்கே கொடுத்தார் என கண்ணன் சொல்கிறார்.

இரு குழந்தைகளை வைத்து வீட்டில் சமாளிக்க முடியவில்லை அதனால் தான் கயலை கூட்டிக் கொண்டு வந்தேன் என சொல்கிறார். அக்கா எங்கே என முல்லை கேட்க அண்ணி தான் கடைக்கு செல்வதாக சொல்கிறார். பின் கண்ணன் சாப்பாடு வாடை நன்றாக இருக்கிறது என சொல்ல முல்லை கண்ணனை சாப்பிட சொல்கிறார். கண்ணனிடம் கதிர் நான் சமைத்தது என சொல்ல நன்றாக இருப்பதாக கண்ணன் சொல்கிறார். அண்ணன் எப்படி இருக்கிறார் என கதிர் கேட்க நீங்க இல்லாமல் வீடே நன்றாக இல்லை என கண்ணன் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here