
முல்லைக்கு நல்ல செய்தி சொன்ன டாக்டர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கயல் பாண்டியனை ஐஸ்வர்யாவும் கண்ணனும் கயல் பாண்டியனை அக்கறையாக பார்த்துக் கொள்கின்றனர். பின் முல்லைக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர் சொல்ல அதை நினைத்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயலும் பாண்டியனும் விளையாட அவர்களுடன் ஐஸ்வர்யாவும் கண்ணனும் விளையாடுகின்றனர். கண்ணன் பாண்டியனையும், கயலையும் யானை மாதிரி உட்காரவைத்து விளையாடுகிறார். அப்போது ஐஸ்வர்யா நானும் உட்காருகிறேன் என சொல்ல கண்ணன் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் அடம் பிடித்து ஐஸ்வர்யா உட்கார அப்போது மீனா வந்து பார்த்து என் கொழுந்தனை கொன்றுவாய் போல என சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவை பாண்டியனுக்கு பால் கொடுக்க சொல்ல, அவன் குடிக்காமல் இருப்பதால் ஐஸ்வர்யா அவனை மிரட்டுகிறார்.
TN Job “FB
Group” Join Now
அப்போது மீனா வந்து பார்த்துவிட்டு குழந்தையிடம் இப்படி எல்லாம் பேச கூடாது என சொல்லி பாசமாக பால் கொடுக்கிறார். ஐஸ்வர்யா மீனா பேசியதை நினைத்து வருத்தப்பட கண்ணன் அண்ணிக்கு பாண்டியன் மீது பாசம் என சொல்கிறார். மறுபக்கம் கடையில் வேலை அதிகமாக இருக்க மூர்த்தியால் சமாளிக்க முடியவில்லை அப்போது ஜீவா அவருக்கு உதவியாக இருக்கிறார். மூர்த்தி நல்ல வேலை நீ இருந்தாய் என சொல்ல அப்போது மீனாவின் அப்பா வருகிறார். அவர் ஜீவாவிடம் வேலை இருப்பதாக சொல்லி வர சொல்கிறார். கடையில் ஆள் இல்லை என ஜீவா சொல்ல முக்கியமான வேலை என அழைத்து செல்கிறார்.
பாரதியை மறக்க சொல்லி சாந்தி சொன்ன அட்வைஸ், குழந்தைகளுடன் வேலை செய்யும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
பின் மருத்துவமனையில் முல்லை கதிர் தனம் காத்துக் கொண்டிருக்க அப்போது டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் நல்லபடியாக இருக்கிறது என சொல்கிறார். முல்லை நான் கர்ப்பமாக இருக்கேனா என கேட்க அது தெரிய இன்னும் 2 வாரம் ஆகும் என சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் வீட்டிற்கு வர அனைவரும் அவர்கள் சொல்ல போகும் விஷயத்தை எதிர்பார்த்து இருக்க தனம் எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் என சொல்கிறார். பின் அனைவரும் சந்தோசப்பட, கதிர் கடைக்கு கிளம்புகிறார். அப்போது கதிரை வருவதை எதிர்பார்த்து மூர்த்தியும் ஜீவாவும் காத்திருக்க கதிர் சந்தோசமாக வருகிறார். அவர்களிடம் எல்லாம் நல்லபடியாக இருப்பதாக டாக்டர் சொன்னதாக சொல்ல அதை கேட்டு மூர்த்தி சந்தோஷப்படுகிறார்.