‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிகவும் பிரபலமான நடிகை சுஜிதா வாங்கும் சம்பளத்தை பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சுஜிதா தனம் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘அண்ணி’:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரையின் முக்கிய தொடராக உள்ளது. விஜய் டிவியில் தற்போது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மிகவும் குடும்ப பாங்கான கதையாக இருப்பதால் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும் கதையின் போக்கு உள்ளது. 4 அண்ணன், தம்பிகளின் வாழ்க்கையில் மூத்த அண்ணியாக, அவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டப்படும் சூழலில் வரும் தனம் அண்ணி அந்த குடும்பத்தையும், தம்பியையும் பல தியாகங்களை செய்து முன்னேற்ற உறுதுணையாக இருப்பது தான் கதை.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி யார் தெரியுமா? பிசினஸ் டூ சினிமா வாய்ப்பு!

பிறகு, மற்ற தம்பிகளுக்கும் திருமணம் முடிந்து அவர்களின் மனைவிகளும் அந்த குடும்பத்தில் ஒத்துப்போவதும், சில சமயங்களில் தவறாக புரிந்து கொண்டு சண்டையிடுவதுமாக கதை செல்கிறது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அனைவரையும் நிஜ பெயரை விட, இந்த கதையின் கதாபாத்திர பெயரை சொல்லி அழைக்கும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்து விட்டனர். அதில், முக்கியமானவர் தனம் வேடத்தில் நடிக்கும் நடிகை சுஜிதா. சுஜிதா பொதுவாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை முழுவதுமாக மாறி உயிரூட்டி விடுவார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் ‘பிக் பாஸ்’ ஜுலி – வைரலாகும் வீடியோ!

அதிலும், குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் தான், தான் இதுவரையில் செய்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமானது ஆகும் என்று சுஜிதாவே பல முறை கூறியுள்ளார். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கன்னட தயாரிப்பு சீரியலிலும் இதே கேரக்டரை சுஜிதா செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த தனம் கதாபாத்திரத்திற்கு நடிகை சுஜிதா வாங்கும் சம்பளத்தை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு நடிகை சுஜிதா ரூ.12,000 சம்பளமாக பெறுகிறாராம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!