கர்பத்துடன் நடனம் ஆடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!

0
கர்பத்துடன் நடனம் ஆடும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!
கர்பத்துடன் நடனம் ஆடும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!
கர்பத்துடன் நடனம் ஆடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் 15 ஆண்டுகளுக்கு பின் தனம் கர்ப்பமாக இருக்கும் நிலையில், தற்போது குலதெய்வ கோவிலுக்கு விளக்கு ஏற்ற சென்றுள்ளனர். அங்கே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில், மூர்த்தியின் தம்பிகளுக்காக 15 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தனம் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இன்னும் 1 வாரத்தில் குழந்தை பிறந்து விடும். இதற்கிடையில் லட்சுமி அம்மா இறந்துவிட்டதால் சோகமான காட்சிகளாக தொடர்ந்து ஒளிபரப்பானது. அதிலிருந்து மீண்டும் தற்போது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விளக்கு ஏற்ற கிளம்பி இருக்கிறார்கள்.

“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

கோவிலுக்கு கண்ணனும், ஐஸ்வர்யாவும் வர வேண்டும் என தனம் சொல்ல மூர்த்தி சரி என சொல்கிறார். ஆனால் அங்கே சென்றால் அனைவரும் நம்மை திட்டுவார்கள் அதனால் போக வேண்டாம் என கண்ணனும் ஐஸ்வர்யாவும் சொல்கின்றனர். இதற்கிடையே கஸ்தூரி ஐஸ்வர்யாவை பார்க்க சென்று பாசத்துடன் பேசுகிறார். இந்நிலையில் கோவிலில் இருந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தனம் கஸ்தூரி, ஜெகா, தனத்தின் அம்மா ஜூன் ஜூலை மாதத்தில் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் களமிறங்கும் சாம் விஷால், மாஸ்டர் பட நடிகர் – இறுதி போட்டியாளர்கள் விவரம்!

கோவிலுக்கு கண்ணன் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் லட்சுமி அம்மா சொன்னது போல தனத்திற்கு ஆண் குழந்தை தான் பிறக்குமா அதில் என்ன குழப்பங்கள் நடைபெற இருக்கிறது என ஆர்வத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாளுக்கு பின் தனத்தை சிரித்த முகத்துடன் பார்ப்பது சந்தோசமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!